உள்ளூர் செய்திகள்

மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி

புதுச்சேரி: மொளப்பாக்கம் அரசு நடுநிலைப்பள்ளி சார்பில், மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரணியை பள்ளி தலைமையாசிரியர் ராபர்ட் கென்னடி துவக்கி வைத்தார். முக்கிய வீதிகள் வழியாக பேரணியாக சென்ற மாணவர்களும், ஆசிரியர்கள் வீடு வீடாக சென்று, மாணவர் சேர்க்கையை வலியுறுத்தி விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர். மேலும், மொளப்பாக்கம் அரசு நடுநிலைப்பள்ளியின் சாதனைகள் மற்றும் சிறப்பு அம்சங்களை பெற்றோர்களிடம் எடுத்துக் கூறி, மாணவர்கள் சேர்க்கை குறித்து வலியுறுத்தினர். இந்நிகழ்ச்சியில், ஆசிரியர்கள் கதிர்வேலு, சத்யவதி, தமிழரசன், ஜபிலா ஜீன், ராஜசேகரன், ஆனந்தராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்