விளையாட்டு விடுதிகளில் மாணவர்கள் சேர்க்கை
மதுரை: விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு பயிற்சிகளுடன் கூடிய தங்கும் விடுதிகளில் சேருவதற்கான மாவட்ட அளவில் தேர்வு மதுரையில் மே 7ம் தேதி நடக்கிறது. மாணவ, மாணவிகளுக்கான விளையாட்டு விடுதிகள் மதுரை, தேனி, சிவகங்கை, ராமநாதபுரம் உட்பட பல மாவட்டங்களில் 23 விளையாட்டு விடுதிகள், ஐந்து விளையாட்டு பள்ளிகள் செயல்படுகின்றன.வரும் கல்வியாண்டில் இந்த விடுதிகளில் சேர்ந்து பயிற்சி பெறுவதற்கான விண்ணப்பங்கள் விளையாட்டு துறை சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. மே 5 ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.மதுரை மாவட்டத்தில் விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலரிடம் இலவசமாக விண்ணப்பங்களை பெறலாம். இதற்கான தேர்வு ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் மே 7 காலை 8.00 மணிக்கு நடக்கிறது.