உள்ளூர் செய்திகள்

இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு

சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) நடத்திய பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை பணியிடங்களை உதவி புள்ளியியல் ஆய்வாளர் பதவிகளுக்கான தேர்வில், தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.இதுகுறித்து தேர்வாணையம் வெளியிட்ட செய்தி குறிப்பு: இப்பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு கடந்த 11.07.2015 அன்று நடைபெற்றது. தேர்வில் தேர்ச்சி பெற்ற 54 விண்ணப்பதாரர்களின் இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு வரும் 06.05.2016 தேதி அன்று நடைபெற உள்ளது. விண்ணப்பதாரர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பிற்கான அழைப்பாணை விரைவு அஞ்சல் மூலம் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், அழைப்பாணை விவரம் www.tnpsc.gov.in என்ற தேர்வாணையத்தின் இணையதளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்