மாணவர்கள் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி
மோகனூர்: நாமக்கல் மாவட்டம், மோகனூர் ஒன்றியம், எஸ்.வாழவந்தி ஊராட்சி நடுநிலைப்பள்ளி சார்பில், அனைத்து மாணவ, மாணவியரையும் அரசு பள்ளியில் சேர்க்க வலியுறுத்தி, விழிப்புணர்வு பேரணி, வாழவந்தியில் நடந்தது. பள்ளித் தலைமையாசிரியர் ராமசாமி தலைமை வகித்தார். பள்ளி முன் துவங்கிய பேரணி, முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் துவங்கிய இடத்தில் முடிந்தது. பேரணியில், அனைத்து மாணவ, மாணவியரையும் அரசு பள்ளியில் சேர்க்க வேண்டும் என்றும், அரசு வழங்கும், 14 வகையான திட்டங்கள் பற்றியும், பல்வேறு சலுகைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.