உள்ளூர் செய்திகள்

மாணவர் சேர்க்கையை அதிகரிக்க விழிப்புணர்வு

மதுரை: மதுரையில் மாணவர் சேர்க்கையை இந்தாண்டு அதிகரிக்க துண்டு பிரசுரம் வழங்குவது, கிராம கல்வி குழுக் கூட்டங்கள் நடத்துவது போன்ற விழிப்புணர்வு செயல்பாடுகளில் ஆசிரியர்கள் ஈடுபடுகின்றனர், என மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் ராஜாமணி தெரிவித்தார். அவர் நேற்று கூறியதாவது: மதுரையில் இக்கல்வியாண்டில் 15 கல்வி ஒன்றியங்களிலுள்ள தொடக்க பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்பு துவங்கப்படும். குறிப்பாக கிராமப்புறங்களில் இதுகுறித்து அதிக விழிப்புணர்வு ஏற்படுத்த மக்களிடம் ஆசிரியர்கள் துண்டு பிரசுரங்கள் அளித்தும், கிராமக் கல்விக் குழுக்கள் உதவியுடன் கூட்டங்கள் நடத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் 15 மாணவர்கள் இருந்தால் ஆங்கில வழி வகுப்பு துவங்கி, ஒட்டுமொத்தமாக தொடக்கக் கல்வியில் இந்தாண்டு மாணவர் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது, என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்