உள்ளூர் செய்திகள்

ஆல் பாஸ் அறிவிப்பில் மாற்றமில்லை

சென்னை: அரியர் மாணவர்களுக்கு, ஆல் பாஸ் வழங்கியது குறித்த, முதல்வர் உத்தரவில் மாற்றம் இல்லை, என, உயர்கல்வி அமைச்சர் அன்பழகன் அறிவித்துள்ளார்.தமிழக சட்டசபையில், தி.மு.க., - எம்.எல்.ஏ., பொன்முடியின் கேள்விக்கு, உயர்கல்வி அமைச்சர் அன்பழகன் அளித்த பதில்:கொரோனா தொற்று பரவல் நடவடிக்கை காரணமாக, பல்கலைகள், கல்லுாரிகளின் தேர்வு ரத்து குறித்து, முதல்வர் இ.பி.எஸ்., அறிவிப்பு வெளியிட்டார். இந்த அறிவிப்புகள், அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ., மற்றும் பல்கலை மானிய குழுவான, யு.ஜி.சி., யின் வழிகாட்டுதல் படியே அமைந்துள்ளன.ஏ.ஐ.சி.டி.இ.,யில் இருந்து எங்களுக்கு எந்த, இ - மெயிலும் வரவில்லை. அண்ணா பல்கலை துணைவேந்தர் சுரப்பா, தன் தனிப்பட்ட, இ-மெயிலில், ஏ.ஐ.சி.டி.இ., சேர்மனிடம் தகவல் பெற்றுள்ளார். அவர் பெற்ற கடிதம், அரசுக்கு வந்த கடிதமாகாது. எனவே, மாணவர்கள் கவலைப்பட வேண்டாம்; முதல்வரின் அறிவிப்பில் மாற்றமில்லை. இவ்வாறு, அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்