புதிய கல்விக்கொள்கை தன்னம்பிக்கை வளர்க்கும்
லக்னோ: &'&'இளைஞர்களிடையே தன்னம்பிக்கையை வளர்ப்பதுதான் புதிய தேசிய கல்விக் கொள்கையின் முக்கிய நோக்கம்&'&' என பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார்.உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ. அரசு அமைந்துள்ளது. தலைநகர் லக்னோவில் உள்ள லக்னோ பல்கலை நிறுவப்பட்டதன் நூற்றாண்டு விழா நேற்று கொண்டாடப்பட்டது.&'வீடியோ கான்பரன்ஸ்&' முறையில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:இளைஞர்கள் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும். சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். புதிய தேசிய கல்விக் கொள்கையின் முக்கிய நோக்கமே அதுதான். நம் இளைஞர்கள் தங்களை தெரிந்து கொள்வதற்கு புதிய கல்வி கொள்கை உதவும். இவ்வாறு பேசினார்.