பிஎச்.டி., சேர்க்கை அவகாசம் நீட்டிப்பு
சென்னை: அம்பேத்கர் சட்ட பல்கலையில், பிஎச்.டி., படிப்பிற்கான மாணவர் சேர்க்கைக்கு அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.இது குறித்து பல்கலை துணைவேந்தர் சந்தோஷ்குமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு டாக்டர்அம்பேத்கர் சட்டபல்கலையில், பிஎச்.டி., மாணவர் சேர்க்கைக்கு, தகுதியான மாணவர்கள் வரும், 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில், கொரோனா தொற்று பாதிப்பு மற்றும் ஊரடங்கு காரணமாக, விண்ணப்பிப்பதற்கான அவகாசம், ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த அவகாசத்தை பயன்படுத்தி, உரிய காலத்தில் விண்ணப்ப பதிவு செய்யலாம். கூடுதல் விபரங்களை, http://tndalu.ac.in/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.