துறை தேர்வுகள் தள்ளி வைப்பு
சென்னை: அரசு ஊழியர்களுக்கான துறை தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டு உள்ளன.தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி சுதன் வெளியிட்ட அறிவிப்பு:போக்குவரத்து வாகன ஆய்வாளர் நிலை -2 பணிக்கு, ஜூன், 8 முதல் நடத்தவிருந்த நேர்முக தேர்வு, தள்ளி வைக்கப்படுகிறது. இதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும். ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளுக்கு நடத்தவிருந்த, கவுன்சிலிங் தேதி பின்னர் அறிவிக்கப்படும். அரசு ஊழியர்களுக்கு, ஜூன், 22 முதல், 30 வரை நடத்தவிருந்த துறை தேர்வுகள், ஆகஸ்டுக்கு தள்ளி வைக்கப்படுகின்றன; தேதி பின்னர் அறிவிக்கப்படும். இத்தேர்வுக்கான விண்ணப்ப தேதி, ஜூலை, 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நடத்தப்பட்ட, 14 துறை தேர்வு முடிவுகள், ஜூலை, 20ல் வெளியிடப்படும்.