ஐ.ஐ.டி.,யில் உள்ள விலங்குகளுக்கு உணவு
சென்னை: சென்னை ஐ.ஐ.டி.,யில் உள்ள ஆதரவற்ற விலங்குகளுக்கு, உணவு வழங்கும்படி, கால்நடைத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ஊரடங்கு காரணமாக, உணவு, தண்ணீர் இன்றி கஷ்டப்படும் ஆதரவற்ற விலங்குகளுக்கு உணவு வழங்குவதை உறுதி செய்யக்கோரி, உயர் நீதிமன்றத்தில், சிவா என்பவர் வழக்கு தொடர்ந்தார். இம்மனு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில், விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், அட்வகேட் ஜெனரல் சண்முக சுந்தரம் ஆஜராகி, &'&'விலங்குகளுக்கு உணவு வழங்க உடனடியாக, 10 லட்சம் ரூபாயை கவர்னர் விடுவித்துள்ளார். 823 கால்நடைகள், 102 குதிரைகள், 18 ஆயிரம் நாய்களுக்கு உணவு அளிக்கப்பட்டு உள்ளது,&'&' என்றார்.உயர் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட குழுவின் உறுப்பினரான வழக்கறிஞர் யோகேஸ்வரன் ஆஜராகி, &'&'அரசு தரப்பில் இன்னும், 9.2 லட்சம் ரூபாய் விடுவிக்கப்படவில்லை. சென்னை ஐ.ஐ.டி.,யில் உள்ள விலங்குகளின் நிலை பற்றி தெரியவில்லை,&'&' என்றார்.இதையடுத்து, முதல் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு:விலங்குகளுக்கு உணவு வழங்க, 9.2 லட்சம் ரூபாயை அரசு விடுவிக்கும் என, நம்புகிறோம். ஊரடங்கு முடிந்ததும், இந்த நிலை தொடராது; இது, தற்காலிகமானது தான். ஊரடங்கு காலத்தில், விலங்குகளுக்கு உணவு கிடைப்பது மிகவும் அரிதானது.சென்னை, ஐ.ஐ.டி., அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து, அங்குள்ள விலங்குகளின் உடல்நிலையை, கால்நடைத்துறை அறிய வேண்டும்.அங்குள்ள விலங்குகளுக்கு உணவு அளிக்க வேண்டும்.இதற்கு, ஐ.ஐ.டி., அதிகாரிகளும் ஒத்துழைக்க வேண்டும். வளாகத்தில் உள்ள விலங்குகளை, ஐ.ஐ.டி., அதிகாரிகளும் கவனிப்பர் என, நம்புகிறோம். இவ்வாறு முதல் பெஞ்ச் உத்தரவிட்டது.