உள்ளூர் செய்திகள்

விருதுக்கான தகுதி அரசுக்கு கருத்துரு

சென்னை: தமிழக அரசு அறிவித்துள்ள, இலக்கிய மாமணி விருதுக்கான தகுதிகள் குறித்து, தமிழ் வளர்ச்சித்துறை கருத்துரு அனுப்பியுள்ளது.முதல்வர் ஸ்டாலின், தன் தந்தை கருணாநிதி பிறந்த நாளான, 3ம் தேதி, முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், சிறந்த எழுத்தாளர்கள் மூவருக்கு, ஒவ்வொரு ஆண்டும், இலக்கிய மாமணி விருது வழங்கப்படும் என்றும், அத்துடன், ௫ லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசு தரப்படும் என்றும், தெரிவித்திருந்தார்.தமிழ் வளர்ச்சித் துறை, பல்வேறு தலைப்புகளின் கீழ் எழுதும் எழுத்தாளர்களுக்கு, பல்வேறு விருதுகளை வழங்கி கவுரவிக்கிறது. அதேபோல், கலை பண்பாட்டு துறை, இயல், இசை, நாடகக் கலைகளில் சிறந்து விளங்குவோருக்கு, கலைமாமணி விருதுகளை வழங்குகிறது.தற்போது, முதல்வர் அறிவித்திருக்கும் இலக்கிய மாமணி விருதுக்கான தொகை, மற்றவற்றை விட அதிகம் என்பதால், மிகவும் தகுதி வாய்ந்த, தமிழ் இலக்கியத்துக்கு தொடர்ந்து தொண்டு செய்துள்ள, 85 வயதுக்கு மேற்பட்டோருக்கு வழங்கலாம் என்பது உள்ளிட்ட கருத்துருவை, தமிழ் வளர்ச்சித் துறை, அரசுக்கு அனுப்பியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்