உள்ளூர் செய்திகள்

மாணவிக்கு உயர் நீதிமன்றம் பாராட்டு

மதுரை: கிராமங்களை மேம்படுத்தும் திட்டத்தை செயல்படுத்த கோரிய வழக்கில், அரசு பள்ளி மாணவியை, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் பாராட்டினர்.புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே கல்விராயன் விடுதியை சேர்ந்த லட்சுமணன் தாக்கல் செய்த பொதுநல மனு:என் மகள் கவுரி. கல்விராயன் விடுதி பள்ளியில், 10ம் வகுப்பு படிக்கிறார். கிராமங்களில் உள்ள வளங்கள், அம்மக்கள் சந்திக்கும் பிரச்னைகளை ஆய்வு செய்துள்ளார். &'தேசிய கிராமப்புற மேம்பாட்டு ஆய்வுத் திட்டம்&' தயாரித்துள்ளார். அதன்படி, கிராமங்கள் தோறும் கலெக்டர்களை நியமிக்க வேண்டும். அவர்கள் மூலம் கிராம பிரச்னைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று, தீர்வு காண வேண்டும்.அவர்கள் மூலம் அரசின் திட்டங்களை கிராமங்களில் எளிதில் செயல்படுத்த முடியும். இத் திட்டம், ஐந்து முதல் எட்டாவது வகுப்பு வரை சமூக அறிவியல் பாடத்தில் இடம்பெற வேண்டும். இதன் மூலம் கிராமங்கள், அதன் பொருளாதாரத்தை மேம்படுத்தும் ஆர்வம் மாணவர்களுக்கு ஏற்படும். இத்திட்டத்தை செயல்படுத்தக் கோரி மத்திய, மாநில அரசுகளுக்கு மனு அனுப்பினோம். பரிசீலிக்க உத்தரவிடவேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி அமர்வு உத்தரவுப்படி, மாணவி கவுரி காணொலியில் ஆஜரானார்.கவுரி: கிராம பிரச்னைகளுக்கு தீர்வு காண வெகு துாரத்தில் உள்ள, கலெக்டர் அலுவலகத்திற்கு மக்கள் மனு அளிக்கச் செல்கின்றனர். மனு அளித்து, கிராமத்திற்கு திரும்ப ஒரு நாள் முழுதும் செலவாகிறது. இதனால், வேலைக்குச் செல்ல முடியாது. அவர்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. கிராமங்கள் தோறும் கலெக்டர் பணியிடங்களை உருவாக்கினால், அவர்களிடம் மக்கள் மனு அளித்து தீர்வு காணலாம்.நீதிபதிகள்: கிராமங்கள் தோறும் வி.ஏ.ஓ.,க்கள் உள்ளனர். கிராம விவகாரம் தொடர்பான அனைத்து விபரங்களும் அவர்களிடம் உள்ளன. அவர்களை கலெக்டர்கள் போல் பாவித்து, மனு அளித்து தீர்வு காணலாமே.கவுரி: வி.ஏ.ஓ.,விடம் மனு அளித்தால் சரியாக பதில் கிடைப்பதில்லை. நடவடிக்கை எடுப்பதில்லை.நீதிபதிகள்: தற்போது உள்ள நிர்வாக முறைக்கு மாற்றான நிர்வாகமுறை திட்டத்தை வலியுறுத்துகிறீர்கள். இது சாத்தியமா என தெரியவில்லை. கொள்கை முடிவு சம்பந்தப்பட்ட விவகாரங்களில் மத்திய, மாநில அரசுகள் தான், முடிவெடுக்க வேண்டும். சிறு வயதில் நாட்டிற்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற மாணவி கவுரியின்முயற்சியை பாராட்டுகிறோம்.அவர் வலியுறுத்தும் திட்டத்தின் முக்கிய அம்சங்களை தெளிவுபடுத்தி ஜூன், 16ல் மனு செய்ய வேண்டும். இவ்வாறு, உரையாடல் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்