நீட் ரத்து: ஓ.பி.எஸ்., கோரிக்கை
சென்னை: &'சட்டசபை கூட்டத் தொடரில், &'நீட்&' தேர்வு ரத்து குறித்த சட்டத்தை நிறைவேற்றி, ஜனாதிபதி ஒப்புதலைப் பெற, நடவடிக்கை எடுக்க வேண்டும்&' என, முதல்வருக்கு, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்., வேண்டுகோள் விடுத்துள்ளார்.அவரது அறிக்கை:&'நீட்&' தேர்வை ரத்து செய்ய, தமிழக சட்டசபையில், 2017 பிப்., 1ல், சட்ட முன்வடிவு நிறைவேற்றப்பட்டு, ஜனாதிபதி ஒப்புதலுக்காக, மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. &'நீட்&' தேர்வால், கிராமப்புற, ஏழை மாணவர்கள், அரசு பள்ளி மாணவர்கள் என, சமுதாயத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள மாணவர்களுக்கு, சில ஆண்டுகளாக, மருத்துவக் கல்வி பயிலும் வாய்ப்பு மறுக்கப்பட்டு உள்ளதாக, அப்போதைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த, தற்போதைய முதல்வர் அறிவித்தார்.தற்போது அவரே, &'நீட்&' தேர்வின் தாக்கம் குறித்து ஆராய குழு அமைப்பது, அவரது அறிவிப்பிலேயே அவருக்கு சந்தேகம் இருக்கிறதா என்ற எண்ணம், மாணவர்கள் மத்தியில் நிலவுகிறது. பிரதமரை சந்திக்கும்போது, இதுகுறித்து விரிவாக எடுத்துரைத்து, நீட் தேர்வை, அகில இந்திய அளவில் ரத்து செய்ய, அழுத்தம் அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.