மாநகராட்சி பள்ளியில் ஆன்லைனில் சேர்க்கை
ஈரோடு: ஈரோடு மாநகராட்சி எஸ்.கே.சி., சாலை நடுநிலைப்பள்ளியில், 2021-22ம் ஆண்டுக்கான, மாணவர் சேர்க்கை ஆன்லைனில் நடந்து வருகிறது. எல்.கே.ஜி., முதல், எட்டாம் வகுப்பு வரை சேர்க்கை தொடங்கியுள்ளது. குழந்தைகளை சேர்க்க விரும்பும் பெற்றோர், கூகுள் படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். கூகுள் படிவம் பூர்த்தி செய்வது, சமர்ப்பிப்பது குறித்த விபரங்களை, தலைமை ஆசிரியை சுமதியின், 99423-62100 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.