உள்ளூர் செய்திகள்

தேசிய திறனாய்வு தேர்வில் சாதனை

கள்ளிமந்தையம்: தேசிய திறனாய்வு தேர்வில் கள்ளிமந்தையம் திருப்பதி அருள்நெறி மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 7 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.மத்திய அரசின் கல்வி உதவித்தொகைக்கான தேசிய திறனாய்வு தேர்வு பிப்ரவரி மாதம் நடந்தது. இதில் திருப்பதி அருள்நெறி மேல்நிலை பள்ளியின் 7 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.பழநி கல்வி மாவட்டத்தில் அதிக மாணவர்கள் தேர்ச்சி பெற்ற பள்ளியாக சாதனை படைத்துள்ளது. மாணவி நித்யஸ்ரீ 106 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதல் இடம் பெற்றார். வென்ற மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையாக 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை மாதம் ரூ.1000 வீதம் 4 ஆண்டுகள் கிடைக்கும். பள்ளிச் செயலர் பொன்னம்பல அடிகள், தலைமையாசிரியர் கருப்புச்சாமி உள்பட பலரும் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்