உள்ளூர் செய்திகள்

சந்திராயன் அண்ணாதுரைக்கு பிரோடியா விருது

பிரபல விஞ்ஞானியும் கல்வியாளருமான யஷ்பாலும் இந்த விருது பெறத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். புனேயில் டிசம்பர் 23ம் தேதி நடைபெறும் விழாவில் இந்த இருவருக்கும் இந்த விருது வழங்கப்பட உள்ளது. கல்வி மற்றும் கம்யூனிகேஷன் டெக்னாலஜி துறையில் செய்த பங்களிப்புக்காக பேராசிரியர் யஷ்பாலும் சந்திராயன் திட்டப் பணிகளில் செய்த பங்களிப்புக்காக மயில்சாமி அண்ணா துறையும் இந்த விருது பெற தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சி.எஸ்.ஐ.ஆர்., அமைப்பின் முன்னாள் டைரக்டர் ஜெனரல் ஆர்.ஏ. மஷேல்கர் தலைமையிலான தேர்வுக் குழு இந்த இருவரையும் இந்த விருது பெறத் தேர்வு செய்துள்ளது. ஆட்டோமொபல் துறை பிரபலமான எச்.கே. பிரோடியா நினைவாக இந்த விருது 1996ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன், விஞ்ஞானிகள் அனில் ககோட்கர், விஜய் பக்தர், கோவிந்த் ஸ்வரூப் ஆகியோர் ஏற்கெனவே இந்த விருதைப் பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்