இனிய சந்திப்பில் இதயம் நெகிழ்ந்தது!
கடந்த 1959 -62ம் ஆண்டில் வேளாண் பல்கலையில் படித்த 192 மாணவர்களில், 108 பேரின் முகவரியை பெரும் சிரமத்துக்கிடையே சேகரித்திருந்த நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள், கடந்த 2003 செப்., 21ல் முதல் முறையாக சந்தித்தனர். அதன் பின் மீண்டும் சந்தித்தனர்.இதில், சிலர் மனைவி, குழந்தைகளுடன் வந்திருந்தனர். கடந்த முறை வர முடியாத சிலர், நேற்றைய சந்திப்பில் முதல் முறையாக பங்கேற்று பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொண்டனர். இதன் பின் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஒவ்வொருவரும் தங்களை அறிமுகம் செய்து கொண்டு தொடர்பு எண், முகவரிகளை பரிமாறிக் கொண்டனர். தங்களுடன் படித்தவர்கள் இப்போது என்ன பணியில், எங்கு உள்ளனர் என்பது பற்றிய விபரங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன. இறுதியில் மதிய உணவுக்கு பின் குழுவாக புகைப்படம் எடுத்துக் கொண்டு பிரிந்தனர்.