உள்ளூர் செய்திகள்

அருந்ததியினருக்கு ஒதுக்கீடு: ஐகோர்ட் உத்தரவு

கல்வி நிறுவனங்கள், அரசுப் பணிகளில் அருந்ததியினருக்கு ஒதுக்கீடு செய்ய, தமிழக அரசு சட்டம் கொண்டு வந்தது. ஆதிதிராவிடர்களுக்கான 18 சதவீத ஒதுக் கீட்டில், அருந்ததியினருக்கு என உள்ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதுதொடர்பாக கடந்த ஏப்ரல் மாதம் அறிவிப்பாணை பிறப்பிக் கப்பட்டது. பின், ஆதிதிராவிடர் நலத்துறை, அரசாணையை பிறப்பித்தது. இந்நிலையில், 5,773 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு, கடந்த மே 28 முதல் ஜூன் 5ம் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடந்தது. பின், 1,943 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு தேர்ந்தெடுக்க, ஜூன் 29ம் தேதி பள்ளி கல்வித் துறை உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து, இடைநிலை ஆசிரியர் பணி நியமனத்தில், அருந்ததியினருக்கான உள் ஒதுக் கீட்டை பின்பற்ற வேண்டும் என உத்தரவிடக் கோரி, சென்னை ஐகோர்ட்டில் சிலர் மனுக்கள் தாக்கல் செய்தனர். தங்களுக்கு நியமன உத்தரவு வழங்க வேண் டும் என, அதில் கோரப்பட்டது.மின்வாரியத்தில் தொழில் நுட்ப உதவியாளர் பணி நியமனத்திலும், அருந்ததியினருக்கான இட ஒதுக்கீட்டை அமல்படுத்தக் கோரி ஒருவர் மனு தாக்கல் செய்தார்.இம்மனுக்களை விசாரித்த ஐகோர்ட், மனுதாரர்களுக்காக தலா ஒரு இடத்தை காலியாக வைத்திருக்க இடைக்கால உத்தரவிட்டது.பின், பூர்வாங்க மனுக்களை நீதிபதி சந்துரு விசாரித்தார். மனுதாரர்கள் சார்பில் வக்கீல்கள் பிரகாசம், மூர்த்தி, பாக்கியராஜ், அரசு வக்கீல்கள் மணிபாரதி, நீலகண்டன், மின்வாரியம் சார்பில் வக்கீல் வைத்தியநாதன் ஆஜராகினர்.   மனுக்களை விசாரித்த நீதிபதி சந்துரு பிறப்பித்த உத்தரவு: கடந்த ஜூன் 29ம் தேதி பிறப்பிக்கப்பட்ட அரசாணையைத் தொடர்ந்து, தற்போது நடக்கும் இடைநிலை ஆசிரியர் தேர்விலும் அருந்ததியினருக்கு முன்னுரிமை அளிக்கும் வகையிலான உள் ஒதுக்கீட்டை சேர்க்க வேண்டும்.இன்னும் தேர்வு நடவடிக்கைகள் முடிவடையவில்லை.  ஆகையால், இந்த ரிட் மனுக்கள் ஏற்கப் படுகின்றன. ஆனால், 2007-08ம் ஆண்டுக்கான தேர்வுக்கு பொருந் தாது.மின்வாரியத்தில் நடக்கும் நியமனத்தில், அருந்ததியினருக்கான உள்ஒதுக்கீடு குறித்து பரிசீலிக்கப்படும் என மின்வாரிய வக்கீல் தெரிவித்தார்.எத்தனை இடங்கள் உள்ளன என்பதை மின்வாரியம் தான் முதலில் கணக்கிட வேண்டும். முன்னுரிமை ஒதுக்கீட்டில் மனுதாரர் வந்தால், அவர் பரிசீலிக்கப்படுவார்.இவ்வாறு நீதிபதி சந்துரு உத்தரவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்