ஐ.ஐ.டி: ஆன்லைன் படிப்பு துவக்கம்
சென்னை ஐ.ஐ.டி., வெளியிட்ட செய்திக்குறிப்பு:சென்னை ஐ.ஐ.டி., யில், கட்டுமான தொழில் நுட்பம் மற்றும் மேலாண்மை குறித்த படிப்பு நடத்தப்படுகிறது. இதற்கான, முதலாவது குழுவுக்கான ஆன்லைன் பதிவு, செப்.,1ல் துவங்கி, ஆக.,20ல் முடிகிறது. ஆர்வமுள்ளவர்கள், https://code.iitm.ac.in/construction-technology-and-management என்ற இணையதளத்தில், விண்ணப்பிக்கலாம்.இன்ஜினியரிங் பொருளாதாரம், கான்கிரீட் தொழில்நுட்பம், சாலை, நடைபாதை தொழில்நுட்பம், கட்டுமான திட்டமிடல் மற்றும் கட்டுப்பாடு, கட்டுமான ஒப்பந்தங்கள் உள்ளிட்ட, 10 வகை அம்சங்கள், இந்த படிப்பில் கற்று தரப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.