ஐ.ஐ.டி.,க்கு முதல் பெண் இயக்குனர்
இந்தியன் இன்ஸ்டிடியூட் டெக்னாலஜி - ஐ.ஐ.டி., வளாகம், தான்சானியாவின் சான்சிபாரில் துவக்கப்பட்டுள்ளது. இதன் இயக்குனராக ப்ரீத்தி அகல்யம் நியமிக்கப்பட்டுள்ளார். முதல் ஐ.ஐ.டி., கடந்த 1951ம் ஆண்டில் காரக்பூரில் நிறுவப்பட்ட நிலையில், 70 ஆண்டுகளுக்கு பிறகு முதன்முறையாக ஒரு பெண் ஐ.ஐ.டி., யின் இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். ’’ஐ.ஐ.டி.,யில் பெண்கள் சிறுபான்மையினராக உள்ளனர் என்பது உண்மைதான். கடந்த சில ஆண்டுகளில் இது சற்று மேம்பட்டுள்ளது. ஆனால் சிக்கல்கள் இன்னும் நீடிக்கின்றன. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் என அனைத்து மட்டங்களிலும் அவை உள்ளது. சென்னை ஐ.ஐ.டி.,யில் சுமார் 12 சதவீத பெண் ஆசிரியர்கள் உள்ளனர். பிரச்னை வளாகங்களில் பாலின உள்ளடக்கம் பற்றியது அல்ல; ஆனால், தொழில்நுட்ப நிறுவனங்களை குறித்த பார்வையை பற்றியது," என்று ப்ரீத்தி அகல்யம் கூறினார்.