சி.பி.எஸ்.இ., பாடதிட்டத்தில்மீடியா படிப்பு வருகிறது
இதனால், சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், மாணவர்கள் அறிவியல் அல்லது வணிகவியல் ஆகிய பாடப்பிரிவுகளை தேர்ந்தெடுப்பதை போன்று, இனி மீடியா கல்வியையும் தேர்வு செய்து படிக்கலாம்.இதற்காக, சி.பி.எஸ்.இ., நிர்வாக குழு, சினிமா, தொலைக்காட்சி, அனிமேஷன் மற்றும் மீடியா போன்ற துறைகளில் பாடங்களை அளித்து வரும், சினிமா தயாரிப்பாளர் சுபாஷ் கைய்யின், விஸ்லிங் உட்ஸ் இன்டர்நேஷனல் கல்வி மையத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.இதைத் தொடர்ந்து, சி.பி.எஸ்.இ., மற்றும் விஸ்லிங் உட்ஸ் இன்டர்நேஷனல் இணைந்து பாடத்திட்டங்களை தயாரிக்க உள்ளது.இந்த பாடப்பிரிவை தேர்வு செய்து தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு, சி.பி.எஸ்.இ., மற்றும் விஸ்லிங் உட்ஸ் ஆகிய இரண்டில் இருந்தும் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.இதே போன்று சில ஆண்டுகள் முன், சி.பி.எஸ்.இ., சேதிய பங்கு சந்தையுடன் இணைந்து, பொருளாதார சந்தை மேலாண்மை பாடப்பிரிவை அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.தற்போது, சி.பி.எஸ்.இ., மீடியா கல்வியை முழு பாடப்பிரிவாகவும், பிறப் பாடப்பிரிவை சேர்ந்த மாணவர்களும் இதை தேர்வு செய்து படிக்கும் வகையில் விருப்பப் பாடமாகவும் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.முதலில், இந்த பாடப்பிரிவை சோதனை திட்டமாக, இந்தாண்டு 20 பள்ளிகளில் அறிமுகப்படுத்த உள்ளது.