உள்ளூர் செய்திகள்

ஐ.ஏ.எஸ்., நேர்காணல் பயிற்சி வகுப்பு

சென்னை சி.ஐ.டி., நகரில் உள்ள, சைதை துரைசாமி மனிதநேயம் அறக்கட்டளை பயிற்சி மையத்தில் படித்து, கடந்த ஆண்டு, ஐ.ஏ.எஸ்., முதன்மை தேர்வு எழுதியவர்களில் 132 பேருக்கு, ஐ.ஏ.எஸ்., -2010 நேர்முகத் தேர்விற்கான இலவசப் பயிற்சி வகுப்புகள், வரும் 18ம் தேதி முதல் துவங்க உள்ளன. சுயவிவரம், ஆளுமைத்திறன், தேசிய மற்றும் சர்வதேச நிகழ்வுகள் உள்ளிட்ட பாடங்களில் பயிற்சி வகுப்புகள் நடக்கும்.இப்பயிற்சியில் பங்குபெறுபவர்களுக்கு உணவு, தங்குமிடம் இலவசமாக தரப்படும். நேர்முகத் தேர்வுக்கான ஆடைகள், காலணிகளும் வழங்கப்படும்.இப்பயிற்சி வகுப்புகளில் பங்குபெற விரும்பும் வெளி மாணவர்கள், உரிய சான்றிதழ்களுடன் நேரில் வந்து, தங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம். சி.ஐ.டி., நகர் அப்பல்லோ பயிற்சி மையத்தில் பயின்று, குரூப் -1 மற்றும் குரூப் -2 தேர்வில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு, பயிற்சி கட்டணம் திரும்பத் தரப்படும்.இவ்வாறு அச்செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்