சுற்றுச்சூழலை பாதுகாக்க துணைவேந்தர் வலியுறுத்தல்
ஈரோடு ஏ.இ.டி., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழாவில், அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கி அவர் பேசியதாவது: இளைஞர்களின் விடிவெள்ளியாக விவேகானந்தர் இருந்தார். அவர் வித்தியாசமான துறவியாக இருந்தார். என்னிடம் 100 இளைஞர்களை தாருங்கள்; நான் இந்தியாவை மாற்றி காட்டுகிறேன் என விவேகானந்தனர் கூறினார். இளைஞர்கள் மீது அவர் அதிக நம்பிக்கை வைத்திருந்தார். அதேபோல் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம், 2020ல் இந்தியா வல்லரசாக வர வேண்டும்; எனவே, கனவு காணுங்கள் என கூறினார். இன்று சுற்றுச்சூழலில் இந்தியா சிக்கியுள்ளது. காவிரி ஆறு, வாய்க்கால் போன்றவை சாயக்கழிவால் மாசுபட்டு வருகிறது. இதற்காக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் மூலமும் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது. புவி வெப்பம் அடைந்து வருவதால், பல இடர்பாடுகளை உலகம் சந்திக்க நேரிடலாம். நம்மால் என்ன செய்ய முடியுமோ, அதை செய்து காட்ட வேண்டும். புவி வெப்பமாதலால் படிப்படியாக பனிக்கட்டிகள் உருக ஆரம்பித்துள்ளன. இதனால் உலகளவில் தண்ணீர் மட்டம் மேலோங்கி வருகிறது. இதனால், ஆபத்து ஏற்படலாம். இதன் காரணமாக வளர்ச்சி பெற்ற நாடுகள் அடிக்கடி மாநாடு நடத்தி ஆய்வு செய்து வருகின்றனர். ஆசிரியர்கள், மாணவர்கள் இணைந்து சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும். தன்னம்பிக்கை, விடாமுயற்சி மாணவ, மாணவியருக்கு தேவை. இவை இரண்டும் இருந்தால் வெற்றி பெற முடியும். சிறு தோல்வி ஏற்பட்டால் கூட நம்மால் தாங்க முடியவில்லை. நம்பிக்கையை வைத்து முன்னேறினால், ஒவ்வொருவரும் வெற்றி பெற முடியும். இவ்வாறு அவர் பேசினார். பள்ளித் தாளாளர் காசியண்ணன் வரவேற்றார். வேளாளர் மகளிர் கல்லூரி தாளாளர் சந்திரசேகர் சாதனை புரிந்த மாணவ, மாணவியர்க்கு பரிசு வழங்கினார். முதல்வர் முருகசாமி, நிர்வாக இயக்குனர் தங்கமணி, துணைத் தலைவர் மோகன் உட்பட பலர் கலந்து கொண்டனர். பள்ளி மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சி நடந்தது.