மருத்துவ கல்லுாரிக்கு மருந்துகள் வழங்கல்
சிதம்பரம்: சிதம்பரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு, இலவசமாக மருந்துகள் வழங்கப்பட்டது.சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கம், சிதம்பரம் மக்கள் மருந்தகம் சார்பில், மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் நோயாளிகளின் தேவைகளுக்கான விட்டமின் மாத்திரைகள் உள்ளிட்ட மருந்துகள் வழங்கப்பட்டது. மருத்துவ கண்காணிப்பாளர் ஜூனியர் சுந்தரேஷிடம், ரோட்டரி முன்னாள் துணை ஆளுநர் தீபக் குமார், மக்கள் மருந்தகம் உரிமையாளர் கேசவன், சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்க செயலாளர் ஆறுமுகம் ஆகியோர் வழங்கினர்.