உள்ளூர் செய்திகள்

ராஜஸ்தானில் புதிய சைனிக் பள்ளி

ராஜஸ்தான்: பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், தனியார் மற்றும் அரசு பங்களிப்புடன் நிறுவப்பட்டுள்ள புதிய சைனிக் பள்ளி ஒன்றை ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் தொடங்கி வைத்தார். இந்தியா முழுவதும் மாநில அரசுகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், தனியா ர்ஆகியோருடன் இணைந்து 100 புதிய சைனிக் பள்ளிகளை கூட்டு முயற்சியில் நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது. இதுபோன்ற 45 பள்ளிகளுக்குபாதுகாப்பு அமைச்சகம் இதுவரை ஒப்புதல் வழங்கியுள்ளது. அவற்றில் 40 பள்ளிகள் ஏற்கனவே செயல்படத் தொடங்கியுள்ளன. ஜெய்ப்பூரில் நிறுவப்பட்டுள்ள பள்ளியும் அவற்றில் ஒன்றாகும். ராஜ்நாத் சிங் பேசுகையில், தேசபக்தியுள்ள இளைஞர்கள் எதிர்காலத்தில் பாதுகாப்புப் படைகளில் சேரவும், தேசத்திற்குச் சேவை செய்யவும் தேவையான சரியான வழிகாட்டுதல்களை இப்பள்ளிகள் வழங்கும். அவற்றுக்கு தேவையான அனைத்து கட்டமைப்பு வசதிகளும் வழங்கப்படும், என்று குறிப்பிட்டார். இந்நிகழ்ச்சியில் ராஜஸ்தான் மாநில துணை முதலமைச்சர் தியாகுமாரி, மாநில இளைஞர்நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கர்னல் ராஜ்யவர்தன் ராத்தோர் (ஓய்வு) ஆகியோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்