மருத்துவத்துறையில் மனித நேயம் தேவை
கோவை: ஸ்ரீ ராமகிருஷ்ணா பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் 21வது பட்டமளிப்பு விழா எஸ்.என்.ஆர்., அரங்கில் நடந்தது.எஸ்.என்.ஆர்.சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் சுந்தர் தலைமை வகித்து பேசுகையில், "பட்டப்படிப்பின் முக்கிய நோக்கம் சமுதாயத்துக்கு சேவை செய்வதே. மருத்துவத் துறையில், பணியாற்றும் போது மனிதநேயத்துடன் செயல்பட வேண்டும்," என்றார்.மணிப்பால் பல் மருத்துவக் கல்லூரி டீன் கோபாலகிருஷ்ணன் 80 இளநிலை பட்டதாரிகள், 12 முதுநிலை பட்டதாரிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.மாணவி சிந்துராரா மூன்று தங்கப்பதக்கங்களை பெற்றதுடன், சிறந்த மாணவிக்கான தங்கப்பதக்கத்தையும் பெற்றார். அவருக்கு இரண்டு அறக்கட்டளை நிதிகளும் வழங்கப்பட்டன.ஸ்ரீ ராமகிருஷ்ணா பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் முதல்வர் ஸ்ரீஹரி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.