உள்ளூர் செய்திகள்

பொதுத்தேர்வில் சிறப்பிடம்: மாணவர்களுக்கு பாராட்டு

உடுமலை: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், நுாறு சதவீத தேர்ச்சி பெற்ற அரசுப்பள்ளி, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கல்வி ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 11ல் துவங்கி, ஏப்., 6ல் நிறைவு பெற்றது. திருப்பூர் மாவட்டத்தில், 345 பள்ளிகளை சேர்ந்த 29,103 மாணவ, மாணவியர் 109 மையங்களில், தேர்வை எழுதினர்.நேற்று பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானதில், 13,400 மாணவர்கள், 14,533 மாணவியர் தேர்ச்சி பெற்றனர். ராமச்சந்திராபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில், 29 மாணவர்கள், 21 மாணவியர் தேர்வு எழுதி நுாறு சதவீத தேர்ச்சி பெற்றனர்.மாணவன் பிரகாஷ் பள்ளி அளவில் முதலிடம் பிடித்தார். பள்ளி தலைமையாசிரியர் முத்துகுமாரசாமி, மாணவர்கள், ஆசிரியர் உள்ளிட்டோருக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.கொழுமம் அரசு உயர்நிலைப் பள்ளி, 93 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. 12 மாணவர்கள், 400 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர்.உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, 90.62 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. பள்ளி மாணவன் சந்தோஷ்கன்னா, 496 மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பிடித்தார்.மாணவனை பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டினர். இதே போல், நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகளுக்கு கல்வி ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்