உள்ளூர் செய்திகள்

பாத்திமா மெட்ரிக் பள்ளி சாதனை

விருத்தாசலம்: பாத்திமா மெட்ரிக் மேல்நிலை பள்ளி, கல்வி மாவட்ட அளவில் சாதனை படைத்துள்ளது.விருத்தாசலம் பாத்திமா மெட்ரிக் மேல்நிலை பள்ளி, 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. இந்த பள்ளி மாணவிகள் முத்தரசி 493; ஜானகி 489; ஹரிணி 487; மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.மேலும், கணிதம், அறிவியல் பாடங்களில், 3 மாணவர்கள், 100 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர். 470 மதிப்பெண்களுக்கு மேல் 22 மாணவர்கள் எடுத்து பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.சாதனை படைத்த மாணவர்களுக்கு, பள்ளி முதல்வர் ஆரோக்கியமேரி சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.இந்த சாதனைக்கு பாடுபட்ட முதல்வர், ஆசிரியர்கள், பெற்றோருக்கு பள்ளி நிர்வாகம் பாராட்டு தெரிவித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்