அரசு இசைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை
சிவகாங்கை: மே 22 சிவகாங்கை அரசு இசைப்பள்ளியில் குரலிசை, பரதம் உள்ளிட்ட பாடப்பிரிவுகளுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறும் என தலைமை ஆசிரியர் சுரேஷ் சிவன் தெரிவித்தார். அவர் கூறியதாவது, கலை பண்பாட்டு துறையின் கீழ் இயங்கும் அரசு இசைப்பள்ளியில் குரலிசை, பரதம், தவில், நாதசுரம், தேவாரம், மிருதங்கம், வயலின் முதலான பாடப்பிரிவுகளில் இசை ஆசிரியர்களை கொண்டு வகுப்பு நடத்தப்படுகின்றன.இப்பாட பிரிவுகளில் சேர வயது 12 முதல் 25 க்குள் இருக்க வேண்டும். குரலிசை, பரதம், தேவாரம், வயலின் பிரிவுகளில் சேர 7ம் வகுப்பு தேர்ச்சி அவசியம். தவில், நாதசுரம் பிரிவுகளில் சேர கல்வி தகுதி தேவையில்லை. மாணவர்களுக்கும் பரத பயிற்சி தரப்படும். 3 ஆண்டு பயிற்சி அளிக்கப்படும். ஆண்டுக்கு ரூ.350 கட்டணம். இலவச பஸ் பாஸ், கல்வி உதவி தொகை மாதம் ரூ.1000, மாணவர் தங்கும் விடுதி உண்டு. பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்ச்சி பெறாதவர்களுக்கு பயிற்சியின் முடிவில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்ச்சிக்கு இணையான சான்று வழங்கப்படும். இசை பள்ளியில் சேர விரும்புவோர் தலைமை ஆசிரியர், மாவட்ட அரசு இசைப்பள்ளி, பனங்காடி ரோடு, கேந்திரியா பள்ளி அருகில், சிவகங்கையில் தொடர்பு கொள்ளவும். மேலும் விபரத்திற்கு 04575 - 243 021ல் தொடர்பு கொள்ளலாம் என்றார்.