உள்ளூர் செய்திகள்

விஜயாபுரம் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை

திருப்பூர்: விஜயாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில், பத்தாம் வகுப்பு பொது தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவியருக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.திருப்பூர், காங்கயம் ரோடு, விஜயாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில், 2025--26 கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பெற்ற மாணவி அனுஸ்ரீ, இரண்டாமிடம் பெற்ற மாணவி யஸ்வந்தீரா, மூன்றாமிடம் பெற்ற தர்ஷன் பாபா மற்றும் திவ்யாஸ்ரீக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.மேலும், அறிவியல் பாடத்தில் 100க்கு 100 மதிப்பெண் பெற்ற அனுஸ்ரீ, பிளஸ் 2 வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பெற்ற மாணவி தேஜாஸ்ரீ, இரண்டாமிடம் பெற்ற ரிதன்யா, மூன்றாமிடம் பெற்ற முப்சீரா ஆகியோருக்கும் ஊக்கத் தொகை வழங்கப்பட்டது. ஜெய்வாபாய் பள்ளி முன்னாள் மாணவியும், தற்போது திருச்சி எஸ்.ஆர்.எம்., மருத்துவக் கல்லுாரியில் முதலாம் ஆண்டு மருத்துவம் பயிலும் அபிநயாவின் கல்விக் கட்டணத்திற்காக, 50 ஆயிரம் ரூபாய் அவரது பெற்றோரிடம் வழங்கப்பட்டது.பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் முன்னாள் தலைவர் மறைந்த பொன்னுலிங்கம் சார்பில் கடந்த 13 ஆண்டுகளாக இந்த ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.அவரது மகன் சேதுபதியும், மறைந்த முத்துசாமி நினைவு நாளையொட்டி அவரது மகன் தங்கவேலும் ஊக்கத்தொகை வழங்கினர். நிகழ்ச்சியில் தலைமையாசிரியர் செல்வராஜ், முன்னாள் ஆசிரியர் பாலசுப்பிரமணி, தற்போதைய ஆசிரியர்கள் ருத்ரமூர்த்தி, கவுசிக், விஜயா, சுசீலா, முத்துலட்சுமி, பூர்ணா மற்றும் வார்டு கவுன்சிலர் பூபதி உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்