பி.எட்., எம்.எட்., படிக்க ஆசையா
கோவை: டவுன்ஹாலில் செயல்பட்டு வரும் அரசு மகளிர் கல்வியியல் கல்லூரியில், 2026-27 கல்வியாண்டுக்கான பி.எட்., மற்றும் எம்.எட்., படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்ப பதிவு துவங்கியது.பி.எட்., படிப்பில் தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், வரலாறு மற்றும் புவியியல் உள்ளிட்ட பாடப்பிரிவுகள் வழங்கப்படுகின்றன. இப்பாடப்பிரிவுகளுக்காக மொத்தம் 100 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. எம்.எட்., படிப்பில் 50 மாணவர்களுக்கு சேர்க்கை வழங்கப்படும். பி.எட்., படிப்பில் சேர, இளங்கலை பட்டமும், எம்.எட்., படிப்பில் சேர பி.எட்., பட்டமும் பெற்றிருக்க வேண்டும். www.tngasa.in வாயிலாக ஜூலை 21ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.