உள்ளூர் செய்திகள்

மாற்று திறனாளிகளுக்கு கம்ப்யூட்டர் பயிற்சி

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் பகுதியில் மாற்று திறனாளிகளுக்கு சுவாசம் தொண்டு நிறுவனம் சார்பாக கம்ப்யூட்டர் பயிற்சி அளிக்கப்பட்டது. சத்தியமங்கலம் ரங்கசமுத்திரம் பகுதியில் இயங்கி வருகிறது சுவாசம் தொண்டு நிறுவனம். இந்நிறுவனத்தின் சார்பாக இப்பகுதியில் வசிக்கும் மாற்று திறனாளிகளுக்கு இலவச கம்ப்யூட்டர் பயிற்சி அளிக்கும் சிறப்பு முகாம் தொடங்கப்பட்டது. ஆர்.எம்.பி., நகர் ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் பன்னீர்செல்வம் துவக்கி வைத்தார். சுவாசம் தொண்டு செயலாளர் கவிதா வரவேற்றார். அமைப்பின் தலைவர் செல்வி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்