உள்ளூர் செய்திகள்

அனைத்தும் மாறும்போது நாமும் மாறவேண்டும்

ஆனால் இந்த மாற்றங்களை எதிர்கொள்ளும் விதத்தில் உலகின் பெரும்பாலான மக்கள் தயாராகவில்லை. தங்களின் கல்வி, வாழ்க்கைமுறை மற்றும் மனப்பாங்கு ஆகியவற்றை மாற்றிக்கொள்ளாமலேயே இருக்கின்றனர். இதனால் உலக வளர்ச்சியின் போக்கிற்கு ஈடுகொடுக்க முடியாமல் பின்தங்கி விடுகின்றனர். எனவே அவர்கள் விழித்தெழ வேண்டிய நேரம் வந்துவிட்டது. கல்வித்துறை என்று எடுத்துக்கொண்டால், இன்றைய இன்டர்நெட் மற்றும் தகவல் தொழில்நுட்ப யுகத்தில், ஆசிரிய பணியின் தன்மை பெரியளவில் மாறியுள்ளது. இந்த நவீன யுகத்தில் பழைய கற்பித்தல் முறையும், பாடப்புத்தகங்களும் காலாவதியாகிவிட்டதாக மாணவர்களுக்கு தோன்றுகிறது. எனவே ஆசிரியர்கள் தங்களின் கற்பித்தல் முறையை மாற்றும் காலம் வந்துவிட்டது. ஆசிரியர் என்பவர் ஆர்வத்தை தூண்டுபவராக இருக்க வேண்டும். மேலும் சுற்றியிருக்கும் உலகத்தைப் பற்றிய ஆர்வத்தை மாணவர்களுக்கு தூண்டுவது ஆசிரியர்களின் முக்கியப் பணியாகும். ஏனெனில் ஆர்வம் அல்லது ஈடுபாடு என்பது கற்றலின் மிக முக்கிய அம்சம். இன்றைய சூழலில் மிகவும் முக்கியமான மற்றொரு விஷயம் என்னவெனில், ஏதாவது ஒரு வெளிநாட்டு மொழியறிவு. படித்த நபர்கள் உடல்ரீதியாக பயணம் செய்தோ அல்லது தகவல்தொடர்பு சாதனங்களின் வழியாகவோ பிறநாட்டு நபர்களுடன் தொடர்பு கொள்கிறார்கள். பொருளாதார தாராளமயமாக்கல் உலகில், இந்த தொடர்பு தவிர்க்கமுடியாத ஒன்று. எனவே அந்த சூழலில் மொழிப் பிரச்சினை எழுந்தால், எடுத்த காரியங்கள் தோல்வியடைவதோடு, தப்பெண்ணங்களும் தோன்றும். மொழியைப் போன்றே தேவைப்படும் இன்னொரு முக்கிய விஷயம், பலவித கலாச்சாரங்களை ஏற்றுக்கொள்ளுதல் மற்றும் அங்கீகரித்தல். ஏனெனில் நாம் இந்தியனாக இருக்கும் அதேவேளையில் உலக குடிமகனாகவும் இருக்கிறோம். உலகத்தின் நிகழ்வுகளில் நாமும் பங்கேற்கிறோம். எனவே குறுகியக் கண்ணோட்டம் நீடித்த மற்றும் பெரிய வளர்ச்சிக்கு உதவாது. எனவே மாறும் காலத்திற்கேற்ப, நவீன தொழில்நுட்ப மற்றும் விஞ்ஞான வளர்ச்சிக்கேற்ப நமது வாழ்க்கை மற்றும் கல்வி முறையை மாற்றிக்கொள்ள வேண்டும்.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்