உள்ளூர் செய்திகள்

விவசாயத்தில் புதிய முயற்சிகளுக்கு ஊக்கம்

விவசாயத் துறையில் புதிய முயற்சிகளை அங்கீகரிக்க, "அக்ரி இன்னோவேஷன் பவுண்டேஷன்" என்ற புதிய அமைப்பை ஏற்படுத்த இந்திய விவசாய ஆராய்ச்சி கவுன்சில் முடிவு செய்துள்ளது. இந்த ஆண்டு இறுதியில் ஏற்படுத்த திட்டமிடப்பட்டிருக்கும் அந்த பவுண்டேஷன், விவசாயத்தில் மேற்கொள்ளப்படும் புதிய முயற்சிகளுக்கு உதவித்தொகை மற்றும் அங்கீகாரம் கிடைப்பதற்கான ஒரு கருவியாக இருப்பதோடு, பருவநிலை மாற்றம் தொடர்பான முக்கிய விஷயங்களை விவாதிக்கும் பொருட்டு ஆட்களை ஒன்று சேர்க்கும் வகையிலும் செயல்படும். இந்த ஆண்டின் துவக்கத்தில் பருவநிலை மாற்றம் தொடர்பாக விவசாயம் மற்றும் அதற்கு தொடர்புடைய துறைகளில் ஏற்படும் பாதிப்புகளை பற்றி ஆய்வுசெய்ய அமைக்கப்பட்ட "நேஷனல் இனிஷியேடிவ் ஆன் கிளைமேட் ரிசலியன்ட் அக்ரிகல்ச்சர்" என்ற திட்டத்திற்கு ரூ.350 கோடி ஒதுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்