உள்ளூர் செய்திகள்

தமிழகத்தில் பெற்றோரை இழந்த 159 குழந்தைகள்

புதுடில்லி: &'கடந்த ஆண்டு மார்ச் முதல், தமிழகத்தைச் சேர்ந்த, 159 குழந்தைகள், கொரோனா தொற்றுக்கு பெற்றோரை இழந்துள்ளனர்&' என, குழந்தைகள் உரிமை பாதுகாப்புக்கான தேசிய கமிஷன், உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது.கடந்த ஆண்டு மார்ச்சில் கொரோனா தொற்று பரவல் துவங்கியது முதல், தற்போது வரை, பெருந்தொற்றுக்கு பெற்றோரை இழந்து வாடும் குழந்தைகள் குறித்த விபரங்களை அளிக்கும்படி, அனைத்து மாநில அரசுகளுக்கும் உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது.பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு, மத்திய அரசின் நிவாரணங்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கக் கோரிய மனு மீது, உச்ச நீதிமன்றம் இவ்வாறு உத்தரவு பிறப்பித்தது. இது தொடர்பான விபரங்களை, மத்திய அரசின், &'பாலசுவராஜ்&' இணையதளத்தில் மாவட்ட நிர்வாகங்கள் பதிவேற்றம் செய்துள்ளன.அந்த விபரங்களின் அடிப்படையில், என்.சி.பி.சி.ஆர். எனப்படும், குழந்தைகள் உரிமை பாதுகாப்புக்கான தேசிய கமிஷன், உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்தது. அதன் விபரம்: கடந்த ஆண்டு மார்ச் முதல், நாடு முழுதும் உள்ள, 7,464 குழந்தைகள் தங்கள் பெற்றோரில் ஒருவரை, கொரோனாவுக்கு பறிகொடுத்துள்ளனர். 1,742 குழந்தைகள் தாய், தந்தையரை இழந்து அனாதையாகி உள்ளனர். 140 குழந்தைகள், உறவினர்கள் கூட இன்றி கைவிடப்பட்டுள்ளனர்.தமிழகத்தை பொறுத்தவரை, 16 குழந்தைகள், தாய் மற்றும் தந்தையரை இழந்துள்ளனர். 143 குழந்தைகள், பெற்றோரில் ஒருவரை, கொரோனாவுக்கு இழந்துள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளை கண்டறியும் நடைமுறை, அவர்களின் மறுவாழ்வுக்கு மத்திய அரசு வகுத்துள்ள நலத்திட்டங்கள் எவ்வாறு செயல்படுத்தபடும் என்ற விபரங்களை சமர்ப்பிக்கும்படி, மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.இது தொடர்பான விபரங்களை அளிக்க, செயலர் அல்லது இணை செயலர் அந்தஸ்திலான தனி அதிகாரியை, அனைத்து மாநில அரசுகளும் நியமிக்க வேண்டும் என, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்