உள்ளூர் செய்திகள்

அரசு இசைப்பள்ளியில் சேர்க்கைமே 2ம் தேதி முதல் தொடக்கம்

ஈரோடு: ஈரோட்டில் பி.பெ.அக்ரஹாரத்தில் மாவட்ட அரசு இசைப்பள்ளி செயல்படுகிறது. இங்கு சேர, 12 முதல், 25 வயதுக்கு உட்பட்டவர்கள், குரலிசை, பரத நாட்டியம், வயலின், மிருதங்க கலைகளுக்கு, ஏழாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தவில், நாதசுரம், தேவராம் கலைகளுக்கு தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். 3 ஆண்டு கால கல்வியாகும். இங்கு படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் மாதம், 1,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும். மாணவ, மாணவியருக்கு அரசு விடுதி வசதி செய்து தரப்படும்.வெளியூர் மாணவ, மாணவியருக்கு இலவச பஸ் பயண வசதி செய்து தரப்படும். மூன்றாண்டுகள் படித்து, அரசு தேர்வு இயக்கக தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்கள், கர்நாடக இசை கச்சேரிகள் நடத்தவும், நாதசுரம், தவில் வாசித்து தொழில் புரியவும், தேவாரம் பாடுதல், கோவில்களில் ஓதுவாராக பணிபுரியவும், ரேடியோ, 'டிவி'களில் நடத்தப்படும் இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்று திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புண்டு. கோவில்களில் தேவார ஓதுவார் பணியில் சேர இப்பள்ளியில் தேவார இசை பயின்று தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்க, அரசாணை உள்ளது.கலை ஆர்வமுள்ள மாணவ, மாணவியர் நடப்பாண்டுக்கு மே, 2 முதல் சேரலாம். கூடுதல் விபரத்துக்கு தலைமையாசிரியரை, 0424 2294365, 94872 47205 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். இத்தகவலை ஈரோடு மாவட்ட கலெக்டர் கந்தசாமி செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்