உள்ளூர் செய்திகள்

பிரதமரின் விஸ்வகர்மா திட்டம்: 23.09 லட்சம் கலைஞர்கள் பயன்

சென்னை: பதினெட்டு வகையான பாரம்பரிய கலைஞர்கள் மற்றும் கைவினைஞர்களுக்கான நலத் திட்டமாக 'பிரதமரின் விஸ்வகர்மா' திட்டம் கடந்த 2023ம் ஆண்டு செப்.,17ம் தேதி தொடங்கப்பட்டது. 2025 ஜன.,01ம் தேதி நிலவரப்படி, 30 லட்சம் பேர் இதில் பதிவு செய்துள்ள நிலையில், 23.09 லட்சம் பயனாளிகள் இதுவரை பயிற்சி உள்ளிட்ட பலன்களை பெற்றுள்ளனர்.இதற்காக இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி, பேடிஎம், பே நியர்பை, பாரத்பே, போன்பே உள்ளிட்ட நிறுவனங்களுடன் அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. பயனாளிகளுக்கான க்யூஆர் கோடு அமைப்பு, டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை ஊக்கத்தொகைகள் உள்ளிட்ட வசதிகளுக்காக இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.இதுவரை 6.8 லட்சம் கலைஞர்கள், கைவினைஞர்களுக்கு மொத்தம் ரூ.22 கோடி மதிப்பிலான மின்னணு பண ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஓஎன்டிசி, ஃபேப் இந்தியா, மீஷோ போன்ற இ-காமர்ஸ் தளங்கள் மூலம் விஸ்வகர்மா பயனாளிகளுக்கு ஆன்லைன் சந்தை ஆதரவும் வழங்கப்பட்டு வருகிறது.இந்த தகவலை மக்களவையில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறைகள் இணையமைச்சர் ஷோபா கரந்த்லஜே எழுத்துப் பதிலில் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்