முதுகலை மருத்துவப் படிப்பு: 27, 28ல் மீண்டும் கலந்தாய்வு
சென்னை: முதுகலை மருத்துவப் படிப்பு, டிப்ளமோ மற்றும் எம்.சிஎச்., ஆகிய படிப்புகளில், காலியாக உள்ள இடங்களை நிரப்ப, 27, 28 ஆகிய தேதிகளில், கலந்தாய்வு நடக்கிறது. மருத்துவக் கல்வி இயக்ககம் வெளியிட்ட அறிவிப்பில், "அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ், சரண்டர் செய்யப்பட்ட இடங்கள் மற்றும் மாநில ஒதுக்கீட்டில் உள்ள காலி இடங்களை நிரப்ப, இந்தக் கலந்தாய்வு நடக்கிறது. "கலந்தாய்வு விவரங்கள், காலியிடங்கள் விவரம் உள்ளிட்டவற்றை, www.tnhealth.org என்ற இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்" என தெரிவிக்கப்பட்டு உள்ளது.