அரியர் தேர்வு விண்ணப்பிக்க 30 வரை கால நீட்டிப்பு
கோவை: கோவை அரசு கலைக் கல்லுாரியில் நவ., மாதம் நடைபெறவுள்ள அரியர் தேர்வுக்கு விண்ணப்பிக்க வரும், 30ம் தேதி வரை காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அரசு கலைக் கல்லுாரியில், 21இளங்கலை மற்றும், 23 முதுகலை படிப்புகள் வழங்கப்படுகின்றன. காலை, மாலை என இரு சுழற்சி முறைகளிலும் சுமார், 4000க்கும் அதிகமான மாணவர்கள் பயின்றுவருகின்றனர். மாணவர்களின் சிரமத்தை போக்க, பருவத் தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள், www.gacbe.ac.in என்ற கல்லுாரி இணையதளத்திலிருந்து நவ., மாதம் நடக்கவுள்ள அரியர் தேர்வுக்கு, விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டது. அதன்படி, கடந்த,7ம் தேதி முதல், 24ம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டது. இதுவரை, 464 பேர் விண்ணப்பித்துள்ள நிலையில்,மாணவர்களின் நலன் கருதி வரும், ௩௦ம் தேதி வரை காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக, கல்லுாரி முதல்வர் ஜெயலட்சுமி தெரிவித்துள்ளார்.