உள்ளூர் செய்திகள்

ஆசிரியர் கல்வி பயிற்சிக்கு 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வாய்ப்பு

கோத்தகிரி: ஆசிரியர் கல்வி பயிற்சிக்கு 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் அறிவித்துத்துள்ளது.கோத்தகிரி ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் (டயட்) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:கோத்தகிரியில் உள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில், நடப்பாண்டு தொடக்க கல்வி ஆசிரியர் பட்டய படிப்பு பயிற்சியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருப்பம் உள்ள மாணவ, மாணவியர் www.tnscert.org என்ற இணையத்தளத்தில் சேர்க்கைக்காக விண்ணப்பிக்கலாம்.பொதுப்பிரிவு, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு, 500 ரூபாய், எஸ்.சி., எஸ்.டி., மற்றும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியருக்கு, 250 ரூபாய் விண்ணப்ப கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.இக்கட்டணத்தை செலுத்தி ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இம்மாதம், 30ம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள்.மேலும், விபரங்கள் தேவைப்படுவோர், கோத்தகிரி ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் அலுவலகத்திலோ, அல்லது மாநில கல்வி கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இணையதள முகவரியிலோ தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்