எல்.எல்.பி., சட்டப்படிப்பு செப்., 30 முதல் விண்ணப்பம்
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலை அறிவிப்பு: அம்பேத்கர் சட்ட பல்கலையில் உள்ள, சீர்மிகு சட்டப்பள்ளி மற்றும் பல்கலையின் இணைப்பில் உள்ள கல்லுாரிகளில், மூன்றாண்டு எல்.எல்.பி., மற்றும் இரண்டாண்டு எல்.எல்.எம்., படிப்புகளுக்கு, மாணவர் சேர்க்கை நடக்க உள்ளது.எல்.எல்.பி.,க்கு, 30ம் தேதி முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படும்; அக்., 28க்குள் விண்ணப்பங் களை பூர்த்தி செய்து வழங்க வேண்டும். எல்.எல்.எம்., சட்ட மேற்படிப்புக்கு, அக்., 7 முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படும்; நவம்பர், 4க்குள், விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். எல்.எல்.பி.,யில் சேர, ஏதாவது ஒரு பாடப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.எல்.எல்.பி., ஹானர்ஸ் படிப்பில், சீர்மிகு சட்டப்பள்ளியில் சேர, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி யின மாணவர்கள், குறைந்தபட்சம், 55 சதவீதம், மற்றவர்கள், 60 சதவீதம் மதிப்பெண் பெற்று இருக்க வேண்டும்.இணைப்பு கல்லுாரிகளில் படிக்க, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் குறைந்தபட்சம், 40 சதவீதமும், மற்றவர்கள், 45 சதவீதமும் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.