ஐ.ஐ.டி., கேம்பஸ் இன்டர்வியூ 312 மாணவர்கள் தேர்வு
சென்னை ஐ.ஐ.டி.,யில் வளாக வேலை வாய்ப்பு கடந்த 2ம் தேதி தொடங்கி, 12ம் தேதி வரை நடந்தது. இந்த வேலை வாய்ப்பு முகாமில், 74 நிறுவனங்கள் பங்கு கொண்டு மாணவர்களை தேர்வு செய்தன. இத்தேர்வில், மாணவர்களுக் கான சம்பளத்தைப் பொறுத்தவரை, ஆண்டுக்கு ஐந்து லட்சம் முதல் 26 லட்சம் ரூபாய் தர சம்மதித்துள்ளன.பொறியியல் துறையில் 47 நிறுவனங்களும், நிதித்துறையில் 12 நிறுவனங்களும், பொதுத் துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை சேர்த்து, 15 நிறுவனங்கள் என மொத்தம் 74 நிறுவனங்கள் வளாக வேலை வாய்ப்பில் பங்கேற்று மாணவர்களுக்கு வேலைவாய்ப்பை அளித்துள்ளன. கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்த 61 சதவீத மாணவர்களும், எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், உலோகத்துறை படித்த 35 - 60 சதவீத மாணவர்களும் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.