உள்ளூர் செய்திகள்

வகுப்புக்கு கட் அடித்த 38மாணவர்களுக்கு ஐ.ஐ.டி., தடை

மாணவர்கள் வகுப்புக்கு வராமல் கட் அடிப்பதைத் தவிர்க்கும் வகையில் கான்பூர் ஐ.ஐ.டி., இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வகுப்புக்கு போதிய நாட்கள் வராமல் இருந்த 118 மாணவர்கள் தேர்வு எழுதுவதற்கு ஐ.ஐ.டி., நிர்வாகம் கடநத் டிசம்பரில் அனுமதி மறுத்தது. மாணவர்கள் வகுப்புக்கு வராமல் இருந்ததற்கான காரணம் கேட்டு மாணவர்களிடம் செனட் கமிட்டி விசாரணை நடத்தியதாக ஐ.ஐ.டி., பதிவாளர் சஞ்சீவ் கலாஸ்கர் தெரிவித்தார்.   அந்த விசாரணையை அடுத்து 80 மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டார்கள். 38 மாணவர்கள் தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டார். அந்த மாணவர்கள் தங்களுக்கான காரண ஆதாரங்களுடன் செனட் கமிட்டியை அணுகும்படியும் கூறப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்