உள்ளூர் செய்திகள்

வி.வி., பி.எஸ்.ஜி., கல்லுாரியில் 39வது பட்டமளிப்பு விழா

கோவை: பி.எஸ்.ஜி. கலை அறிவியல் கல்லூரியின் 39வது பட்டமளிப்பு விழா ஜி.ஆர்.டி கலையரங்கில் நடந்தது. பி.எஸ்.ஜி. அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார்.சென்னை பிரைஸ் வாட்டர் ஹவுஸ் நிறுவனத்தின் பட்டயக் கணக்காளர் பாஸ்கர் செல்வம், பாரதியார் பல்கலையின் தேர்வுக்கட்டுப்பாட்டாளர் விஜயராணி பங்கேற்றனர். பல்வேறு துறைகளைச் சேர்ந்த 21 ஆய்வு மாணவர்கள், 1,142 முதுநிலை மாணவர்கள் மற்றும் 3,159 இளநிலை மாணவர்களுக்கு பட்டம் வழங்கினர். முதல்வர் ஜெயந்தி, துணை முதல்வர், பேராசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்