உள்ளூர் செய்திகள்

விஜயதசமி நாளில் மாணவர்கள் அட்மிஷன்

திருப்பூர்: விஜயதசமியையொட்டி, வரும் 20ம் தேதி அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி., வகுப்புகளுக்கு சிறப்பு மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.அன்றைய தினம் தலைமை ஆசிரியர்கள், பொறுப்பு ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்து மாணவர் சேர்க்கைப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமின்றி, எட்டாம் வகுப்பு வரை சேர விரும்பும் மாணவர்களையும் சேர்த்துக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) அருள்ஜோதி கூறியதாவது:மழலையர் வகுப்புகளில் குழந்தைகளைச் சேர்க்கத் தவறிய பெற்றோர், வேலைவாய்ப்புக்காக பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு இடம்பெயர்ந்த குடும்பத்தினர் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம். விஜயதசமி நாளில் குழந்தைகளைப் பள்ளியில் சேர்ப்பது சிறப்பு என்ற நம்பிக்கை கொண்ட பெற்றோருக்கும் இந்தச் சிறப்பு மாணவர் சேர்க்கை பயனுள்ளதாக இருக்கும்.புதிதாகப் பள்ளியில் சேரும் மாணவர்களுக்குப் புத்தகங்கள் வழங்கப்பட்டு, தொடர்ந்து பாடங்களைக் கற்கத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்படும். இதுவரை பள்ளியில் சேராமல் வாய்ப்பைத் தவறவிட்ட மாணவர்கள், அடுத்த கல்வியாண்டு வரை காத்திருக்காமல் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திப் பள்ளியில் சேரலாம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்