சி.ஏ., தேர்வில் சாதிக்க டிப்ஸ்
சாதாரணமாக படிப்பவர்களால், 'சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட்' படிப்பில் தேர்ச்சி பெற முடியாது. சி.ஏ., படிப்பு கடினமானது என்றாலும், அர்ப்பணிப்புடன் படித்தால் வெற்றி பெறலாம். தேர்வில் வெற்றி பெறுவது எப்படி?* தினமும் குறைந்தது 12 மணி நேரம் அர்ப்பணிப்புடன் படிக்க வேண்டும்.* ஐ.சி.ஏ.ஐ., இன்ஸ்டிடியூட் அல்லது தனியார் நிறுவனங்களில் பயிற்சி பெறலாம்.* சி.ஏ., படிப்பில் நினைவாற்றல் மிகவும் முக்கியம். அதேவேளை, சி.ஏ., படிப்பதால் நினைவாற்றல் அதிகரிக்கும்.* ஐ.சி.ஏ.ஐ., நிறுவன மெட்டீரியல் மற்றும் புத்தகங்களை படிக்க வேண்டும். ஏனெனில், கேள்விகள் அதிலிருந்துதான் வரும்.சமூக அந்தஸ்து உயரும்30 ஆண்டுகளுக்கு முன்பு சி.ஏ., தேர்வு எழுதியவர்களில் 2 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். இன்று சராசரியாக 10 சதவீதம் பேர் தேர்ச்சி பெறுகின்றனர். சில நேரங்களில், 15 சதவீதம் வரையிலும் தேர்ச்சி விகிதம் உள்ளது. சி.ஏ., படிப்பு சமூக அந்தஸ்தையும், சிறந்த வேலைவாய்ப்பையும் வழங்குகிறது.வேலை இல்லாத சி.ஏ., இல்லை! சி.ஏ., படித்து வேலை இல்லை என்று ஒருவரும் இல்லை; அனைவருக்கும் வேலை, சுய தொழில் வாய்ப்பு உண்டு. சமீபத்திய கேம்பஸ் இன்டர்வியூவில், 9 ஆயிரம் 'சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட்'கள் பங்கேற்றனர். ஆனால் 12 ஆயிரம் வேலைகள் இருந்தன. - ராஜேந்திர குமார், மத்திய கவுன்சில் உறுப்பினர், ஐ.சி.ஏ.ஐ.,