உள்ளூர் செய்திகள்

போலீஸ் உடற்தகுதி தேர்வு: 459 பேர் வெற்றி

மதுரை நகர், புறநகரைச் சேர்ந்த 455 பெண்கள் உட்பட 2296 பேர் உடற்தகுதித் தேர்வுக்கு தகுதி பெற்றனர்.இவர்களுக்கு நேற்று மதுரை ஆயுதப்படை மைதானத்தில் கமிஷனர் நந்தபாலன், டி.ஐ.ஜி. பாலசுப்பிரமணியம், மாவட்ட எஸ்.பி. மனோகர் தலைமையில் சான்றிதழ் மற்றும் மார்பளவு சரிபார்ப்பு, 1500 மீ ஓட்டம் நடந்தது. 459 பேர் அடுத்தக்கட்ட தேர்வுக்கு தகுதி பெற்றனர்.தினமும் 600 பேர் வீதம் தேர்வுக்கு அழைக்கப் பட்டுள்ளனர். பெண்களுக்கு டிச.13ல் தேர்வு நடக்கிறது. முதற் கட்ட தகுதித் தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு டிச.14 முதல் 16 வரை 400 மீ. மற்றும் 100 மீ. ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், கயிறு ஏறுதல் தேர்வு நடக்கிறது. டி.ஐ.ஜி. பாலசுப்பிரமணியம் கூறுகையில், தமிழகத்தில் மதுரையில் தான் அதிகம் பேர் உடற்தகுதித் தேர்வுக்கு அழைக்க ப்பட்டுள்ளனர். நேற்று அழைக்கப்பட்ட 600 பேரில் 38 பேர் வரவில்லை. வீண் சர்ச்சைகளை தவிர்க்க, அனைத்து  நடவடிக்கைகளும் வீடியோவில் பதிவு செய்வதோடு, சம்பந்தப்பட்ட தேர்வாளரிடமிருந்து கையெழுத்து பெறப்படுகிறது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்