இன்னும் ஒரு மாதத்தில் 5,100 பேருக்கு வேலை
சென்னை: இன்னும் ஒரு மாதத்தில் 5,100 மருத்துவ பணியிடங்கள் நிரப்பப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்அமைச்சர் கூறுகையில், தமிழகத்தில் 20 நாட்களில், 1,021 டாக்டர்கள்; 977 நர்ஸ்கள் தேர்வு செய்யப்பட்டு, பெரும்பாலானோர் பணியாற்றி வருகின்றனர். தொடர்ந்து, ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள, 332 ஆய்வக பரிசோதகர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்கள் விரும்பிய இடங்களுக்கு, பொது கலந்தாய்வு வாயிலாக பணியில் அமர்த்தப்பட்டு உள்ளனர்.இதற்கிடையே, 2,250 கிராம சுகாதார செவிலியர்கள், 986 மருந்தாளுனர்கள், 1,066 சுகாதார ஆய்வாளர்கள், மருத்துவம் சார்ந்த களப்பணியாளர்கள் 798 பேர் என, 5,100 பணியிடங்கள், ஆர்.ஆர்.பி., வாயிலாக தேர்வு செய்யும் பணிகள் நடந்து வருகிறது. இப்பணியிடங்கள் ஒரு மாதத்தில் நிரப்பப்படும் என்றார்.