உள்ளூர் செய்திகள்

ஆசிரிய பயிற்றுனர் காலியிடங்களுக்கு 5,400 விண்ணப்பங்கள் விற்பனை

3,600 விண்ணப்பங்களை பி.எட் பட்டதாரிகள் சமர்ப்பித்துள்ளனர்.தமிழகத்தில் அனைவருக்கும் கல்வி இயக்க திட்டத்தில் காலியாக உள்ள 562 ஆசிரிய பயிற்றுனர் பணிக் காலியிடங்கள் ஆசிரியர் தேர்வு வாரிய எழுத்து தேர்வில் மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர்.இதற்கான விண்ணப்பங்கள் கடந்த 30ம் தேதி முதல் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விண்ணப்பங்களை பூர்த்தி செய்து 14ம் தேதி மாலைக்குள் கொடுக்க வேண்டும். எழுத்து தேர்வு வரும் ஜனவரி மாதம் 31ம் தேதி நடக்கிறது.இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க பி.எட் பட்டதாரிகள் கடும் போட்டோ போட்டியிட்டதால் விண்ணப்பங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாமல் பி.எட் பட்டதாரிகள் திணறி வந்தனர்.தொடர் தட்டுப்பாட்டின் காரணமாக கலெக்டர் அலுவலகம், முதன்மை கல்வி அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டத்தையும் நடத்தினர். தொடர்ந்து பி.எட் பட்டதாரிகளுக்கு டோக்கன் வழங்கப்பட்டு விண்ணப்பங்கள் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.இந்நிலையில் நெல்லை முதன்மை கல்வி அலுவலகத்தில் 4 ஆயிரம் விண்ணப்பங்கள் விற்பனையானது. தொடர் தட்டுப்பாட்டின் காரணமாக ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு கோரிக்கை விடுக்கப்பட்டதை தொடர்ந்து நேற்று முன்தினம் கூடுதலாக 3 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்துள்ளது.இதனால் தட்டுப்பாடு இல்லாமல் விண்ணப்பங்கள் பி.எட் பட்டதாரிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.விண்ணப்பங்களை பூர்த்தி செய்து வழங்க நாளை (14ம் தேதி) கடைசி நாளாகும். மொத்தம் 7 ஆயிரம் விண்ணப்பங்களில் 5,400 விண்ணப்பங்கள் விற்பனையாகியுள்ளன. இதில் 3,600 விண்ணப்பங்களை பூர்த்தி செய்து முதன்மை கல்வி அலுவலகத்தில் பி.எட் பட்டதாரிகள் ஒப்படைத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்