உள்ளூர் செய்திகள்

சேலம் பெரியார் பல்கலையில் 8 புதிய ஆராய்ச்சிப் பள்ளிகள்!

சென்னை: சேலம் பெரியார் பல்கலை துறைகளை ஒருங்கிணைத்து, எட்டு புதிய ஆராய்ச்சிப் பள்ளிகள் துவக்கப்பட்டுள்ளன. சேலத்தை தலைமையிடமாக கொண்டு, 1997ல், பெரியார் பல்கலை துவக்கப்பட்டது. தமிழ், ஆங்கிலம், இதழியல், நுண்ணுயிரியல் உள்ளிட்ட, 23 துறைகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில், முதுநிலை பட்டப்படிப்பு, எம்.பில்., முனைவர் பட்ட ஆய்வுப்படிப்பு ஆகிய மூன்று பிரிவுகளில், 2,000 பேர் படித்து வருகின்றனர். இந்நிலையில், பெரியார் பல்கலை துறைகளின் செயல்பாட்டை மேம்படுத்தும் வகையில், எட்டு ஆராய்ச்சிப் பள்ளிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. எட்டு, ஆராய்ச்சிப் பள்ளிகளில், பல்கலையின் துறைகள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. ஒருங்கிணைப்பாளர்களுக்கு, நியமன ஆணையை பல்கலை துணைவேந்தர் சுவாமிநாதன் வழங்கினார். கணிதம், இயற்பொருள், உயிர் அறிவியல், உயிர்வாழ் அறிவியல், சமூக அறிவியல், வணிக கல்வி, மொழிப்பள்ளி, தொழில்சார் கல்வி என, எட்டு பிரிவுகள் துவக்கப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்